Monday 15 July 2013



உனது மனம் கல்லால் ஆனது
என்ற எனது எண்ணத்தை
இன்று முதல் மாற்றிக் கொள்கிறேன்
உனது மனம் உண்மையில் இரும்பால் ஆனது
என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்
காரணம் எறும்பு ஊரக் கல்லும் தேயுமாம்

அழகான கவிதை
@@@@@@@@@


ஒவ்வொரு முறை எனை நீ 
  காயப்படுத்துன்கிற போதும் 
  உன்னைப் பற்றி திட்டி 
  எழுதத் தான் மனம் துடிக்கும்.
 எழுதி முடித்த பின்
  தான் நானே அறிவேன்...
  உன்னை திட்டி எழுதாமல் 
 உன்னை பற்றி அழகாக‌
 கவிதை எழுதி இருக்கிறேன் என்று






இன்னொரு நாள்
#################
நீ இந்நேரமாவ‌து
என்னைப் பற்றி சிந்திப்பாயா
என்னும் எண்ணத்திலேயே
இன்றும் கழிந்தது இன்னொரு நாள்

ஒளிரும் அலைபேசியில்
உன் பெய‌ரை
ரசித்தே பேசப்படாமல்
போயின உன் அழைப்புகள்

Thursday 4 July 2013

நினைவிற்கெட்டிய தூரத்தில் தானே நீ எப்போதும் இருக்கிறாய்...

ரசித்த கவிதை
@@@@@@@@

தொடர்பு கொள்ள முடியாத
தொலைவில் நீயிருப்பதாக
... செல்பேசி சொல்லிற்று

அனுப்பிவைத்த குறுஞ்செய்திகள்
காற்றினில் கரைந்துவிட்டதாக
திரும்பி வந்த தகவல்கள் சொல்லிற்று

கருத்திடமுடியாது உன் பக்கங்கள்
மூடப்பட்டிருப்பதாக
சமூக வலைத்தளங்கள் சொல்லிற்று

மின்னஞ்சல்கள் அடைந்துவிட முடியாத
பெட்டிகளை மட்டுமே நீ வைத்திருப்பதாக
திரும்பி வந்தவை சொல்லிற்று

இருக்கும் உன் திசையை
நீ காட்டமறுப்பதாக
இணையதள வரைபடங்கள் சொல்லிற்று

உன் பெயர் மட்டும் எப்போதும்
சாம்பல் நிறத்தில் பூத்திருப்பதாகவே
அரட்டைப்பெட்டிகள் சொல்லிற்று

இவை அனைத்தையும்
நொடிக்கொரு தரம்
சரிபார்த்துக்கொண்டிருந்தவளிடம்
நினைவிற்கெட்டிய தூரத்தில் தானே
நீ எப்போதும் இருக்கிறாய் என்று
என் மனம் சொல்லிற்று

Wednesday 14 March 2012

இன்னமமும் தொலைந்தவளாக...நான்!

இன்று
நீ என்னோடு இல்லை!
நினைவுகளைப் பரிசாக அளித்து
வெகு தொலைவில்...

ஜென்மங்கள் மேல் எனக்கு
நம்பிக்கை இல்லை !
ஜென்மம்என்று ஒன்று இருந்தால்.
வினாடி நேரமும் உன்னைப்
பிரியாத உறவாய்…!

நீ..!!!
எனக்கு வேண்டும்..
நான் வேண்டும் வரம்
இது ஒன்று தான்…..!

சூரியன் திசை மாற்றி அனுப்பி விட்டான்
உனக்கான தேடலில் – இன்னமமும்
தொலைந்தவளாக...நான்!

Wednesday 11 January 2012

என்றுமே அழகு தான்...!

எனது மௌனங்களில்
இன்று புதிய ஓசைகள்

என்னுள் இருந்த இருளில்
இன்று புதிய ஒளி

எனது தனிமையில்
இன்று உனது வரவு

எனது பார்வையில்
எங்கும் உனது பிம்பம்

தெரியாத காற்றும்
புரியாத கவிதையும்

சொல்லாத காதலும்
கலையாத கனவும்

என்றுமே அழகு தான்...!