Monday, 5 December 2011

எப்படி முடிகிறது

உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது .......
நீ பேசாமலே உன் மௌனங்களை என்னோடபேசவைக்க......

உன் அன்பும்

புன்னகை மட்டும் காயப்படுத்தவில்லை
உன் அன்பும் தான்!

என் விழிகளின் சுமையில்

என் விழிகளின் சுமையில் – அவனது கனவுகள்.
என் மனதின் சுமையில் – அவனது நினைவுகள்.
என் காதலின் சுமையில் – அவனது பிரிவுகள்!

Saturday, 16 July 2011

நீ சிரித்த மறு கணம்!

அடுக்கடுக்காய்
நீ சொன்ன
பொய்களெல்லாம்
அழகாகிப் போயின,
நீ சிரித்த
மறு கணம்!

என் அன்பைப் போல..

கண்களில் தென்பட்ட அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை
இதயத்தில் இடம் பிடித்த அனைத்தும் கண்களில் தென்படுவதில்லை
என் அன்பைப் போல!

Saturday, 25 June 2011

இல்லாமல் போவதைவிட!

இல்லாமலிருப்பதில்
எவ்விதப் பிரச்சனைகளுமிருப்பதில்லை
இருந்து பின் இல்லாமல் போவதைவிட!

சொல்லி புரிய வைக்கும் வார்த்தைகளைவிட

சொல்லி புரிய வைக்கும்
வார்த்தைகளைவிட
சொல்லாமல் விட்ட
வார்த்தைகளுக்கு
சக்தி மிக மிக அதிகம்
புரிந்தும்
புரியாதது போல
நீ நடித்தாலும்
உன் கண்கள்
காட்டிவிட்டன.....
கவிதையை விடவும் அழகாய்.......

Friday, 17 June 2011

என் உள்ளத்தில் இன்னிசையாக...

உன் கனிவான பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...

உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..

உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.

எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..

எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...

உனக்குத் தெரியாது

என் விருப்பங்களை எல்லாம்
முழுமையாக நிறைவேற்றுவதாக
நினைத்துக் கொள்கிறாய்
உனக்குத் தெரியாது
நான் விரும்புவது எல்லாம்
நீ நிறைவேற்ற கூடிய
விருப்பங்களை மட்டும்
தான் என்று........

மனதில் பதிந்த காவியம்...

மறப்பதற்கு
நீ ஒன்றும்
மணலில்
வரைந்த
ஓவியம் அல்ல..
மனதில்
பதிந்த
காவியம்...

நீ எனக்குள் வாழ்வதால்!

என் ஒவ்வொரு நாளையும்
உனக்காய் உனக்காய்
மட்டுமே விடிய ஆசைப்படுகின்றேன்
நீ எனக்குள் வாழ்வதால்!

காற்றை போலத்தான் - நீயும்

உன் காதோர கூந்தலை
கலைத்து போகும்
காற்றை போலத்தான் - நீயும்

அடிக்கடி என்னை
அழகாய்
கலைத்து விடுகிறாய் .

இரு விழிகளின் ஒளிப்பதிவு

அழகிய உலகில்
அற்புத உணர்வுகளின்
அதிசயக்களம் காதல் - இது
இரு விழிகளின் ஒளிப்பதிவு
இரு இதயங்களின் ஓர் பதிவு

ஒருவரை ஒருவர்
தேடுவதும்
ஒருவரால் ஒருவர்
தேடப்படுவதும்
இனம் புரியாத
இதமான சுகம்

Wednesday, 1 June 2011

நான் தொலைந்தே போனேன்.

உன் புன்னகை அழகில்
புதைந்து போனேன்.
உன் கண்களின் அழகில்
கரைந்து போனேன்.
உன் வார்த்தையின் அழகில்
நிறைந்து போனேன்.
மொத்தத்தில் உன் அன்பில்…நான்
தொலைந்தே போனேன்.

நீ சிரித்த மறு கணம்!!!

அடுக்கடுக்காய்
நான் சொன்ன
பொய்களெல்லாம்
அழகாகிப் போயின,
நீ சிரித்த
மறு கணம்!!!

உன் அன்பால்

உன் அழகால்
தினமும் எனை கொன்று போனாய்
உன் அன்பால்
தினமும் எனை வென்று போனாய்..!

Tuesday, 31 May 2011

என் இதயத்தில்

என் இதயத்தில்
தாயாய்…
தந்தையாய்…
தோழனாய்…

உன் பெயரையே
என் கவிதையாய்
பொறித்து
வைத்திருக்கிறேன் நான்!

ஆயுள் கைதியாய்!

அடைக்கலம் கேட்கின்றேன்
உனக்குள் மட்டும்
சிறைக்கைதியாயல்ல
ஆயுள் கைதியாய்!

உன் பாதங்களை தொட்டுக் கொள்ள...

நீ
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...

அதி அற்புதமான கவிதை...

இவ்வுலகின்
அதி அற்புதமான
கவிதை...
என்
தோளில் சாய்ந்து
சிரித்து கொண்டிருக்கிறது

நீ தேடிப்போகும் அன்பு

நீ
தேடிப்போகும் அன்பு
அழகானது...
உன்னைத்
தேடிவரும் அன்பு
..

Sunday, 29 May 2011

உன் அன்பு கிடைக்கும் என்றால்...

நொடிக்கு நூறுமுறை இறப்பேன்
என் மரணம் உன் மடியில் என்றால்...
இறந்த மறு நொடியே மீண்டும் பிறப்பேன்
உன் அன்பு கிடைக்கும் என்றால்...

அன்பு

நீ
தேடிப்போகும் அன்பு
அழகானது...
உன்னைத்
தேடிவரும் அன்பு
ஆழமானது...

நினைவூட்டுகிறாய்!

செல்லச்
சண்டைகளில்
கொஞ்ச நேர
மெளனங்களில்
கூடித் திரியும்
பொழுதுகளில்
இடைவெளியில்லா
உன் நினைவுகளில்…..
இப்படி ஏதாவது
ஒன்றில் தினமும் நீ
இந்த உலகில் நானும்
தனிமையிலில்லை என்பதை
நினைவூட்டுகிறாய்!
ஆயிரம் இழப்புகள்....
ஆயிரம் தோல்விகள்.....
ஆயிரம் ஆயிரம் வலிகள் இருந்தாலும்

நான் நானகவே
பிறக்க விரும்புகிறேன்

உன் அன்புக்காக !!!!!
இறைவன் படைத்து .. இயல்பு கெடாமல்..
தொடரும் பட்டியலில் ..இன்னும் இருக்கிறது ..
குழந்தையின் சிரிப்பு
 
சின்னதாய் இருந்த என் நெற்றிக் குங்குமம் இன்னும் 
வட்டம் பெரிதாகி விடுகிறதுஓவ்வொரு முறையும் உன் மூச்சுக் காற்று பட்டு!

Saturday, 28 May 2011

நீயும் உன் அன்பும்....

நான் பறப்பதற்கு
சிறகு தேவை இல்லை
நீயும்
உன் அன்பும் போதும் .....

உள்ளத்தில் இன்னிசையாக...

உன் கனிவான பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...

உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..

உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.

எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..

எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...

உச்சம் மீண்டும் தொடுவர்..

அணுகுண்டு போட்டனர், புல் பூண்டு கருகியது..
உயிர்கள் ஒழிந்தது ; உயரம் குறைந்தது
உழைத்தார்கள் ஓய்வின்றி
உலகின் உச்சம் தொட்டார்கள்!

சுனாமி வந்தது, புரட்டிப் போட்டது..
அணு உலை வெடித்தது ; ஆருயிர்கள் மடிந்தது
உழைப்பார்கள் ஓய்வின்றி
உலகின் உச்சம் மீண்டும் தொடுவர்..

Friday, 27 May 2011

எனது கற்பனையில் நீ

உன் கனிவான பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...

உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..

உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.

எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..

எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளத்தில் இன்னிசையாக...

ஆயுள் கைதியாய்!

அடைக்கலம் கேட்கின்றேன்
உனக்குள் மட்டும்
சிறைக்கைதியாயல்ல
ஆயுள் கைதியாய்!

மனதில் பதிந்த காவியம்...

மறப்பதற்கு
நீ ஒன்றும்
மணலில்
வரைந்த
ஓவியம் அல்ல..
மனதில்
பதிந்த
காவியம்...

உனக்காய் உனக்காய்...

என் ஒவ்வொரு நாளையும்
உனக்காய் உனக்காய்
மட்டுமே விடிய ஆசைப்படுகின்றேன்
நீ எனக்குள் வாழ்வதால்!

கவிதையை விடவும் அழகாய்...

சொல்லி புரிய வைக்கும்
வார்த்தைகளைவிட
சொல்லாமல் விட்ட
வார்த்தைகளுக்கு
சக்தி மிக மிக அதிகம்
புரிந்தும்
புரியாதது போல
நீ நடித்தாலும்
உன் கண்கள்
காட்டிவிட்டன.....
கவிதையை விடவும் அழகாய்.......

தேடுவதும் தேடப்படுவதும்

அழகிய உலகில்
அற்புத உணர்வுகளின்
அதிசயக்களம் காதல் - இது
இரு விழிகளின் ஒளிப்பதிவு
இரு இதயங்களின் ஓர் பதிவு

ஒருவரை ஒருவர்
தேடுவதும்
ஒருவரால் ஒருவர்
தேடப்படுவதும்
இனம் புரியாத
இதமான சுகம்

oru ponmanai naan pada by shasireca

என்றும் இளமையாய்...

காதலே!
இறைவனிடம்
எப்படி வேண்டினாய் ?
உனக்கு மட்டும்
இப்படி ஒரு வரம்
நீ மட்டும்
என்றும் இளமையாய்...